19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்

19 ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்





1. 1828 - பிரம்ம சமாஜத்தை நிறுவியவர்- ராஜா ராம்மோகன் ராய் -(1772-1833)


2. ராஜாராம் மோகன்ராய் புலமை பெற்றிருந்த மொழிகள்- வங்காளம் (தாய்மொழி),சமஸ்கிருதம்,அரபி,பாரசீகம்,ஆங்கிலம்.


3. ராஜா ராம்மோகன் ராய் கல்கத்தாவில் கோவிலை நிறுவிய ஆண்டு -1828 ஆகஸ்டு 20 . திருவுருவச் சிலைகள் வைக்கப்படவில்லை.


4. 1829-இல் தலைமை ஆளுநர் வில்லியம் பெண்டிங் சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழித்துகட்ட இயற்றிய சட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் - ராஜாராம் மோகன்ராய்.


5. இந்துக்களின் மறை நூல்கள் அனைத்தும் ஒரே கடவுள் கோட்பாட்டை அல்லது ஒரே கடவுளை வணங்குவதை உபதேசிப்பதாக கூறியவர் - ராஜாராம் மோகன்ராய்.


6. ராஜாராம் மோகன்ராய் மறைவுக்குப் பின்னர் அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்தவர்- மகரிஷி தேவேந்திரநாத் தாகூர்.


7. ரவீந்திரநாத் தாகூரின் தந்தை - மகரிஷி தேவேந்திரநாத் தாகூர். 1817 - 1905.


8. மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் நம்பிக்கை பற்றிய எத்தனை கொள்கைகளை முன்வைத்தார் - 4.


9. கேசவ் சந்திர சென் பிரம்ம சமாஜத்தில் இனைந்த ஆண்டு-1857.


10. பிரம்ம சமாஜம் உறுப்பினர்கள் இடையே பிளவு ஏற்பட்ட ஆண்டு -1886.


11. ஆதிபிரம்ம சமாஜம் - தேவேந்திரநாத் தாகூர்.


12. இந்திய பிரம்ம சமாஜ் - கேசவ் சந்திர சென்.


13. குழந்தைத் திருமணத்தை எதிர்த்தோர் இந்தியாவின் பிரம்ம சமாஜத்திலிருந்து விலகி நிறுவிய அமைப்பு - சாதாரண சமாஜ்.


14. நவீன வங்காள உரைநடையின் முன்னோடி - ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் (1820-1891).


15. 1856 - இல் யாருடைய முயற்சியால் விதவை மறுமண சட்டம் இயற்றப்பட்டது - ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்.


16. 1860 - இயற்றப்பட்ட திருமண வயதுச்சட்டம் - திருமண வயது -10.


17. 1891 - இயற்றப்பட்ட திருமண வயதுச்சட்டம் - திருமண வயது -12.


18. 1925 - இயற்றப்பட்ட திருமண வயதுச்சட்டம் - திருமண வயது -13.


19. பிரம்ம சமாஜத்தின் கிளை அமைப்பு - பிரார்த்தனை சமாஜம்.


20. 1867 - பம்பாய் இல் பிரார்த்தனை சமாஜத்தை தொங்கியவர் - ஆத்மராம் பாண்டுரங்.


21. பிரார்த்தனை சமாஜத்தில் இரண்டு மேன்மை மிக்க உறுப்பினர்கள் - R.C.பண்டர்கர், M.G.ரானடே.


22. மகாதேவ் கோவிந்த் ரானடே (1842 - 1901) தொடங்கிய அமைப்புகள்:

1. விதவை மறுமணச் சங்கம் - 1861.

2. புனே பர்வஜனிக் சபா - 1870 .

3. தக்கான கல்வி கழகம் - 1884 .


23. குலாம்கிரி (அடிமைத்தனம்) என்ற நூலின் ஆசிரியர் - ஜோதிபா பூலே.


24. 1875 - ஆண்டு ஆரிய சமாஜத்தை நிறுவியவர் - சுவாமி தயானந்த சரசுவதி.


25. சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதிய நூல்கள்-சத்யார்த்த பிரகாஷ்.


26. வேதங்களுக்கு திரும்புவோம் என்பது யாருடைய முழக்கம் - சுவாமி தயானந்த சரஸ்வதி (1824 - 1883).


27. இஸ்லாமுக்கும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய இந்துக்களை மீண்டும் இந்துக்களாக மாற்ற தொடங்கிய இயக்கம் - சுத்தி இயக்கம்.


28. சுத்தி இயக்கத்தை தொடங்கியவர் -சுவாமி தயானந்த சரஸ்வதி.


29. ஆரிய சமாஜம் தூய்மைக் கோட்பாடு குறித்தக் கருத்து முரண்பாட்டால் இரண்டாக பிரிந்த ஆண்டு -1893.


30. தயானந்த சரஸ்வதிக்கு பின்னர் ஆரிய சமாஜத்தின் பொறுப்பை ஏற்றவர்- ஸ்ரத்தானந்தா.


31. ராமகிருஷ்ண பரமஹம்சர் காலம் -1836 - 1886.


32. கல்கத்தாவுக்கு அருகேயிருந்த தட்சிணேஸ்வரம் என்னும் ஊரைச் சார்ந்த எளிய அர்சசகராக பணிபுரிந்தவர்-ராமகிருஷ்ண பரமஹம்சர்.


33. கடவுள் காளியின் தீவிர பக்தர்-ராமகிருஷ்ண பரமஹம்சர்.


34. ஜீவன் என்பதே சிவன் எனவும் கூறியவர்- ராமகிருஷ்ண பரமஹம்சர்.


35. மனிதர்களுக்கு செய்யப்படும் சேவையே கடவுளுக்கு செய்யப்படும் சேவையாகும் என்றவர்-ராமகிருஷ்ண பரமஹம்சர்.


36. ராமகிருஷ்ண பரமஹம்சருடைய முதன்மைச் சீடர்- சுவாமி விவேகானந்தர்.


37. சுவாமி விவேகானந்தர் இயற்பெயர் - நரேந்திரநாத் தத்தா.


38. 1893 - ல் உலக சமய மாநாடு எங்கு நடைபெற்றது - சிகாகோ


39. உலக சமய மாநாட்டில் இந்து சமயம், பக்தி மார்க்கத் தத்துவம் குறித்து சொற்பொழிவு ஆற்றியவர் - சுவாமி விவேகானந்தர்.


40. 1875 - பிரம்மஞான இயக்கத்தை அமெரிக்காவில் தோற்றுவித்தவர்கள் - H.P.பிளாவட்ஸ்கி, கர்னல் H.S.ஆல்கட் .


41. 1886 - ஆண்டு இந்தியாவில் பிரம்மஞான இயக்கம் சென்னை அடையாறில் தோற்றுவித்தவர் அன்னிபெசன்ட்.


42. இந்தியாவில் பௌத்த சமயம் புத்துயிர் பெறுவதில் முக்கிய பங்கு வகித்த அமைப்பு- பிரம்ம ஞான சபை.


43. அன்னிபெசன்ட் பிரம்மஞான கருத்துக்களை பரப்ப தொடங்கியசெய்திதாள் - நியு இந்தியா, காமன்வீல்.


44. ஜோதிபா பூலே 1827 - மகாராஷ்டிராவில் பிறந்தார்.


45. 1852 - ஆண்டு - ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேயில் துவங்கியவர் - ஜோதிபா பூலே .


46. சத்யசோதக் சமாஜ் (உண்மையை நாடுவோர் சங்கம்) எனும் அமைப்பை தொடங்கியவர் - ஜோதிபா பூலே.


47. ஜோதிபா பூலேயின் மனைவி - சாவித்திரி பாய்.


48. பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும், விதவைகளுக்கு காப்பகங்களை உருவாக்கியவர் - ஜோதிபா பூலே .


49. ஜோதிபா பூலே தீவிர கருத்துக்களை சுருக்கி கூறும் நூல் - குலாம்கிரி (அடிமைத்தனம்).


50. ஒடுக்கப்பட்ட மக்கள் மேம்பாட்டிற்காக தர்ம பரிபாலன யோகம் எனும் அமைப்பை தொடங்கியவர் - நாராயண குரு.


51. அருவிபுரம் எனும் ஊரில் ஒரு பெரிய கோவிலை கட்டி அதை அனைவருக்கும் அர்பணித்தவர் - நாராயண குரு.


52. நாராயண குருவால் ஊக்கம்பெற்றவர் - அய்யன்காளி.


53. அய்யன்காளி 1863 - ஆண்டு திருவனந்தபுரத்தில் உள்ள வெங்கநூரில் பிறந்தார்.


54. 1907 - சாது ஜன பரிபாலன (ஏழை மக்கள் பாதுகாப்புச் சங்கம்) எனும் அமைப்பை நிறுவியவர் - அய்யன் காளி.


55. 1875 - ஆண்டு அலிகார் முகமதிய ஆங்கிலோ-ஓரியண்டல் கல்லூரியை அலிகாரில் நிறுவியவர் - சர் சையது அகமதுகான்.


56. அலிகார் முகமதிய ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி பல்கலைகழகமாக தரம் உயர்த்த பட்ட ஆண்டு- 1920.


57. தியோபந்த் இயக்கம் ஒரு - மீட்பியக்கம்.


58. 1851 - இல் என்பார் ரஹ்னுமாய் மஜ்தயாஸ்னன் சபா (பார்சிகளின் சீர்திருத்தச் சங்கம்) எனும் அமைப்பை நிறுவியவர் - பர்துன்ஜி நெளரோஜி.


59. நிரங்கரி (உருவமற்ற) இயக்கத்தை நிறுவியவர் - பாபா தயாள்தாஸ் .


60. நாம்தாரி இயக்கத்தை நிறுவியவர் - பாபாராம் சிங் .


61. சிங்சபா நிறுவப்பட்ட இடம் - அமிர்தசரஸ்.


62. சிங்சபா நோக்கம் - சீக்கிய மதத்தின் புனிதத்தை மீட்டெடுப்பது.


63. இராமலிங்க அடிகளார் காலம் -1823 - 1874.


64. இராமலிங்க சுவாமிகள் (அ ) இராமலிங்க அடிகளார் - வள்ளலார்.


65. துயரப்படும் உயிரினங்களை கண்டு இரக்கம் கொள்ளாதவர்கள் கல் நெஞ்சக்காரர்கள் ஆவார்கள் மற்றும் அவர்களது ஞானம் மேகங்களால் மூடப்பட்டு இருக்கும் என கூறியவர்- வள்ளலார்.


66. 1856 - ஆண்டு சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவியவர் - வள்ளலார்.


67. 1867 - வடலூரில் சாதி எல்லைகளை தாண்டி அனைத்து மக்களுக்கும் இலவச உணவகத்தை நிறுவியவர் - வள்ளலார்.


68. வள்ளலார் பாடல்கள் திருவருட்பா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டது, சைவர்களை புண்படுத்தியதால் அவரது பாடல்கள் "மருட்பா" எனக் கண்டனம் செய்தனர்.


69. வைகுண்ட சுவாமிகள் எங்கு பிறந்தார் - கன்னியாகுமரிக்கு அருகில் சாமித்தோப்பு-சாஸ்தாகோவில்விளை கிராமம்.


70. வைகுண்ட சுவாமி இயற்பெயர் - முடிசூடும் பெருமாள்.


71. சமத்துவ சமாஜ் - அமைப்பை நிறுவியவர் - வைகுண்ட சுவாமிகள்.


72. வைகுண்ட சுவாமிகள் சமயவழிபாட்டு முறை - அய்யாவழி.


73. வைகுண்ட சுவாமிகள் அறிவுரை கருத்துகள் அனைத்தும் தொகுக்கப்பட்ட நூல் -அகிலத்திரட்டு.


74. ஒடுக்கப்பட்டோரின் கோவில்நுழைவுக்கு ஆதரவாக குரல் எழுப்புவதற்காக அத்வைதானந்தா சபா எனும் அமைப்பை உருவாக்கியவர் - பண்டிதர் அயோத்திதாசர்.


75. 1882 - ம் ஆண்டு திராவிட கழகம் எனும் அமைப்பை நிறுவியவர்கள் -அயோத்திதாசர், ஜான் திரவியம்.


76. திராவிட பாண்டியன் எனும் இதழை தொடங்கியவர் - அயோத்திதாசர்.


77. அயோத்திதாசர் 1891 - ஆண்டு திராவிட மகாஜனசபை என்ற அமைப்பை நிறுவி முதல் மாநாடு எங்கு நடைபெற்றது - நீலகிரி.


78. 1907 - ஒரு பைசா தமிழன் என்ற பெயரில் ஒரு வாராந்திர பத்திரிகை தொடங்கியவர் - அயோத்திதாசர் .


79. 1898 - சாக்கிய பெளத்த சங்கம் எனும் அமைப்பை சென்னையில் நிறுவியவர் - அயோத்திதாசர் .


80. சத்யார்த்தபிரகாஷ் எனும் நூலின் ஆசிரியர் - தயானந்த சரஸ்வதி.


81. விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் -M.G. ரானடே


82. ராஸ்ட் கோப்தார் யாருடைய முழக்கம்-பார்சி இயக்கம்.

Comments

Popular posts from this blog

11TH- தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

TNPSC Polity Model Question Papers for TNPSC Group Exams | Group 1, Group 2 & Group 4

11TH- STD -தென்னிந்தியாவில் சமுதாய உருவாக்கம்

Tnpsc previous year question paper