Skip to main content

சர்வதேச சதுரங்க தினம் 2026 | International Chess Day 2026 Theme, History & Importance in Tamil

  சர்வதேச சதுரங்க தினம் 2026 – வரலாறு, முக்கியத்துவம், Theme மற்றும் சுவாரஸ்ய தகவல்கள் சர்வதேச சதுரங்க தினம் 2026 ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 அன்று உலகம் முழுவதும் சர்வதேச சதுரங்க தினம் (International Chess Day) கொண்டாடப்படுகிறது. அறிவுத்திறன், திட்டமிடும் திறன், பொறுமை மற்றும் தர்க்கரீதியான சிந்தனையை வளர்க்கும் விளையாட்டாக சதுரங்கம் உலகளவில் மிகுந்த மதிப்பைப் பெற்றுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடக்கூடிய இந்த விளையாட்டு கல்வி, விளையாட்டு மற்றும் தனிமனித வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சர்வதேச சதுரங்க தினத்தின் வரலாறு 1924 ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று பிரான்ஸ் நாட்டின் பாரிசில் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE - Fédération Internationale des Échecs) நிறுவப்பட்டது. இதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 அன்று சர்வதேச சதுரங்க தினம் கொண்டாடப்படுகிறது. பின்னர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (United Nations General Assembly) இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து, உலக நாடுகள் அனைத்தும் சதுரங்கத்தின் கல்வி மற்றும் சமூக முக்கியத்துவத்தை எடுத்துரைக்க ஊக்குவித்தது. In...

TNPSC General Tamil – பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் Notes

 அறிமுகம்

சங்கம் மருவிய கால இலக்கியங்கள் = பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

வேறு பெயர்கள்:

நீதிநூல்கள்

அறநூல்கள்

இருண்ட கால இலக்கியங்கள்



“பதினெண்கீழ்க்கணக்கு” என்ற வழக்கை கொண்டுவந்தவர்கள்:


மயிலைநாதர்


பேராசிரியர்



இலக்கணம் கூறுவது:


பன்னிரு பாட்டியல்




முக்கிய வரி


> “அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி அறம்பொருள் இன்பம் அடுக்கி யவ்வத் திறம்பட உரைப்பது கீழ்க் கணக்காகும்”


பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பட்டியல்


எண் நூல் பொருள் பாடல்கள் ஆசிரியர்


1 நாலடியார் அறம் 400 சமண முனிவர்கள்

2 நான்மணிக்கடிகை அறம் 106 விளம்பிநாகனார்

3 இன்னா நாற்பது அறம் 40 கபிலர்

4 இனியவை நாற்பது அறம் 40 பூதஞ்சேந்தனார்

5 திருக்குறள் அறம் 1330 திருவள்ளுவர்

6 திரிகடுகம் அறம் 100 நல்லாதனார்

7 ஆசாரக்கோவை அறம் 100 பெருவாயில் முள்ளியார்

8 பழமொழி நானூறு அறம் 400 முன்றுறை அரையனார்

9 சிறுபஞ்சமூலம் அறம் 102 காரியாசான்

10 முதுமொழிக்காஞ்சி அறம் 100 கூடலூர் கிழார்

11 ஏலாதி அறம் 80 கணிமேதாவியார்

12 கார் நாற்பது அகம் 40 கண்ணன் கூத்தனார்

13 ஐந்திணை ஐம்பது அகம் 50 மாறன் பொறையனார்

14 ஐந்திணை எழுபது அகம் 70 மூவாதியார்

15 திணைமொழி ஐம்பது அகம் 50 கண்ணன் சேந்தனார்

16 திணைமாலை நூற்றைம்பது அகம் 150 கணிமேதாவியார்

17 கைந்நிலை அகம் 60 புல்லாங்காடனார்

18 களவழி நாற்பது புறம் 40 பொய்கையார்


முக்கிய தகவல்கள்


அறநூல்கள் – 11


நாலடியார்


நான்மணிக்கடிகை


இன்னா நாற்பது


இனியவை நாற்பது


திருக்குறள்


திரிகடுகம்


ஆசாரக்கோவை


பழமொழி நானூறு


சிறுபஞ்சமூலம்


முதுமொழிக்காஞ்சி


ஏலாதி



அகநூல்கள் – 6


கார் நாற்பது


ஐந்திணை ஐம்பது


ஐந்திணை எழுபது


திணைமொழி ஐம்பது


திணைமாலை நூற்றைம்பது


கைந்நிலை



புறநூல் – 1


களவழி நாற்பது


சிறிய & பெரிய நூல்கள்


நீதி நூல்களுள் சிறியது = இன்னா நாற்பது


நீதி நூல்களுள் பெரியது = திருக்குறள்


அகநூல்களுள் சிறியது = கார் நாற்பது


அகநூல்களுள் பெரியது = திணைமாலை நூற்றைம்பது

இரட்டை அறநூல்கள்


இன்னா நாற்பது


இனியவை நாற்பது


நாலடியார்


முக்கிய விவரங்கள்


ஆசிரியர் = சமண முனிவர்கள்


தொகுத்தவர் = பதுமனார்


பாடல்கள் = 400


பொருள் = அறம்


பா வகை = வெண்பா



வேறு பெயர்கள்


நாலடி


நாலடி நானூறு


வேளாண் வேதம்


திருக்குறளின் விளக்கம்



நூல் பகுப்பு


அறத்துப்பால் = 13


பொருட்பால் = 24


இன்பத்துப்பால் = 3



சிறப்புகள்


முப்பெரும் அறநூல்களில் ஒன்று


ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்


பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள ஒரே தொகைநூல்



முக்கிய வரிகள்


“கல்வி அழகே அழகு”


“கல்வி கரையில; கற்பவர் நாள்சில”


நான்மணிக்கடிகை


விவரங்கள்


ஆசிரியர் = விளம்பிநாகனார்


பாடல்கள் = 106


பாவகை = வெண்பா



சிறப்புகள்


ஒவ்வொரு பாடலிலும் 4 கருத்துக்கள்


வடமொழி கலப்பு அதிகம்



முக்கிய வரிகள்


“யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி”


“இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்”



இன்னா நாற்பது


விவரங்கள்


ஆசிரியர் = கபிலர்


பாடல்கள் = 40


பாவகை = வெண்பா



சிறப்புகள்


துன்பம் தரும் செயல்கள்


164 இன்னாத செயல்கள்



முக்கிய வரிகள்


“தீமையுடையார் அருகில் இருத்தல் இன்னா”


“குழவிகள் உற்றபிணி இன்னா”


இனியவை நாற்பது


விவரங்கள்


ஆசிரியர் = பூதஞ்சேந்தனார்


பாடல்கள் = 40



சிறப்புகள்


இனிமை தரும் செயல்கள்


124 இனிய செயல்கள்



முக்கிய வரிகள்


“வருவாய் அறிந்து வழங்கல் இனிது”


“ஒப்பமுடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிது”



திருக்குறள்


முக்கிய விவரங்கள்


ஆசிரியர் = திருவள்ளுவர்


பாடல்கள் = 1330


அதிகாரங்கள் = 133


பால் = 3


அறத்துப்பால்


பொருட்பால்


இன்பத்துப்பால்




வேறு பெயர்கள்


தமிழ் மறை


பொதுமறை


முப்பால்


தெய்வநூல்


பொய்யாமொழி



சிறப்புகள்


“அ”வில் தொடங்கி “ன”வில் முடிகிறது


தை 2 = திருவள்ளுவர் தினம்



மொழிபெயர்ப்பு


ஆங்கிலம் = ஜி.யு.போப்


இலத்தின் = வீரமாமுனிவர்


ஜெர்மன் = கிரால்



முக்கிய வரிகள்


“மனத்துக்கண் மாசிலன் ஆகுதல் அறம்”


“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்”


“இடுக்கண் வருங்கால் நகுக”



திரிகடுகம்


விவரங்கள்


ஆசிரியர் = நல்லாதனார்


பாடல்கள் = 101



சிறப்புகள்


சுக்கு, மிளகு, திப்பிலி அடிப்படையில் பெயர்


ஒவ்வொரு பாடலிலும் “இம்மூன்றும்” வரும்



முக்கிய வரிகள்


“நெஞ்சம் அடங்குதல் வீடாகும்”


“வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்”


ஆசாரக்கோவை


விவரங்கள்


ஆசிரியர் = பெருவாயில் முள்ளியார்


பாடல்கள் = 100



சிறப்புகள்


ஆசாரம் = ஒழுக்கம்


பல வெண்பாக்கள் கலந்து அமைந்த நூல்



முக்கிய வரிகள்


“விருந்தினர் மூத்தோர் பசுசிறை பிள்ளை”


“பகல் தெற்கு நோக்கார்”


பழமொழி நானூறு


விவரங்கள்


ஆசிரியர் = முன்றுறை அரையனார்


பாடல்கள் = 400



வேறு பெயர்கள்


பழமொழி


உலக வசனம்



சிறப்புகள்


வரலாற்று குறிப்புகள் அதிகம்


முப்பெரும் அறநூல்களில் ஒன்று



முக்கிய வரிகள்


“கற்றலின் கேட்டலே நன்று”


“தனிமரம் காடாதல் இல்”



சிறுபஞ்சமூலம்


விவரங்கள்


ஆசிரியர் = காரியாசான்


பாடல்கள் = 102



சிறப்புகள்


ஐந்து வேர்களின் பெயரால் அமைந்த நூல்


அம்மை வனப்பிற்கு உரியது



முக்கிய வரிகள்


“நூற்கு இயைத்த சொல்லின் வனப்பே வனப்பு”


முதுமொழிக்காஞ்சி


விவரங்கள்


ஆசிரியர் = கூடலூர் கிழார்


பாடல்கள் = 100



வேறு பெயர்


அறவுரைக்கோவை



சிறப்புகள்


ஆத்திச்சூடியின் முன்னோடி


ஒவ்வொரு பத்தும் “ஆர்கலி உலகத்து” என்று தொடங்கும்



முக்கிய வரிகள்


“ஒழுக்கம் உடைமை”


“வாய்மை உடைமை”


ஏலாதி


விவரங்கள்


ஆசிரியர் = கணிமேதாவியார்


பாடல்கள் = 80



சிறப்புகள்


ஆறு மருந்துப் பொருட்களின் பெயரால் அமைந்தது


உணவு கொடுப்பதின் சிறப்பை கூறுகிறது



முக்கிய வரிகள்


“சாவது எளிது; அரிது சான்றாண்மை”


கைந்நிலை


விவரங்கள்


ஆசிரியர் = புல்லாங்காடனார்


பாடல்கள் = 60



சிறப்புகள்


ஐந்திணை ஒழுக்க நிலைகள்


சில பாடல்கள் சிதைந்துள்ளன


கார் நாற்பது

விவரங்கள்

ஆசிரியர் = மதுரைக் கண்ணங்கூத்தனார்

பாடல்கள் = 40


சிறப்புகள்

முல்லைத்திணை மட்டும்

அகநூல்களில் சிறியது

முக்கிய வரிகள்

“தூதோடு வந்த மழை”


ஐந்திணை ஐம்பது

விவரங்கள்

ஆசிரியர் = மாறன் பொறையனார்

பாடல்கள் = 50

சிறப்புகள்

முல்லை முதலில் வரும்

5 திணை × 10 பாடல்கள்


ஐந்திணை எழுபது

விவரங்கள்

ஆசிரியர் = மூவாதியார்

பாடல்கள் = 70

சிறப்புகள்

விநாயகர் வணக்கம்

நிமித்தங்கள் கூறப்பட்டுள்ளன


திணைமொழி ஐம்பது

விவரங்கள்

ஆசிரியர் = கண்ணன் சேந்தனார்

பாடல்கள் = 50


சிறப்புகள்

எதுகை, மோனை அமைப்பு

இசைக்கருவிகள் குறிப்பு



திணைமாலை நூற்றைம்பது

விவரங்கள்

ஆசிரியர் = கணிமேதாவியார்

பாடல்கள் = 150


சிறப்புகள்

அகநூல்களில் பெரியது

5 திணை × 30 பாடல்கள்

Comments

Popular posts from this blog

விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு

 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பொது விசயங்களில் அக்கறை செலுத்தக்கூடிய குழுக்கள் சென்னையில் தோன்றின. சென்னைவாசியில் சம்மதம் மெட்ராஸ் நேட்டிவ் அசோசியேசன தென்னிந்தியாவின் தொடங்கப் பெற்ற காலத்தால் முற்பட்ட இந்த அமைப்பு 1852 இல் கஜினி லட்சுமி நரசி சீனிவாசநர் மற்றும் அவர்களை சேர்ந்தவர்களால் நிறுவப்பட்டது  இவ் அமைப்பின் வணிகர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் தனது உறுப்பினர்களின் நலன் வரிகளை குறைக்க கோரிக்கை வைப்பது போன்ற நோக்கங்களை உள்ளடக்கியிருந்தது.  எனினும் மக்களின் நிலை அவர்களின் தேவைகள் ஆகியவற்றின் மீது அரசின் கவனத்தை திரும்பும் பணியை இவ்வரசு மேற்கொண்டது. இவ் அமைப்பின் சாதனைகள்  வருவாய்த்துறை அதிகாரிகளால் விவசாயிகள் சித்திரவதை படுவதற்கு எதிராக அமைப்பு போராடியதால் சித்திரவதை ஆணையம் அமைக்கப்பட்டது இதன் விளைவாக சித்திரவதை சட்டம் ஒழிக்கப்பட்டது. கிறித்துவ சமய பரப்பாளர்களை அரசு ஆதரிப்பதை எதிர்த்தது 1862க்கு பிறகு இவ்வமைப்பு செயல் இழந்தது.  தேசியவாத பத்திரிகைகள்  1877 டி முத்துசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதியாக பதவியேற்றார் இந்தியர்...

📘 10th Economics – Full Notes (Detailed Short Notes in Tamil)

  📍 Lesson 1 – பொருளாதாரம்: அறிமுகம் 1. பொருளாதாரம் என்றால்? மனிதர்களின் தேவைகள் (Needs) & வளங்கள் (Resources) சம்பந்தமான படிப்பு. வளங்கள் குறைவாக இருக்கிறது → அதனாலே economics படிப்பு தேவை. Father of Economics – Adam Smith Book – Wealth of Nations (1776) 2. தேவைகள் & விருப்பங்கள் Needs – அத்தியாவசிய பொருட்கள் (food, clothes, shelter) Wants – ஆசை பொருட்கள் (phone, bike) 3. உற்பத்தி காரணிகள் (Factors of Production) நிலம் (Land) – இயற்கை வளங்கள் தொழில் (Labour) – மனித உழைப்பு மூலதனம் (Capital) – கருவிகள், இயந்திரங்கள் தொழில் முனைவோர் (Entrepreneur) – திட்டமிடுபவர், லாபம் எடுப்பவர் 4. பொருளாதார செயல்பாடுகள் உற்பத்தி → விநியோகம் → நுகர்வு 5. பொருட்கள் (Goods) வகைகள் நுகர்வு பொருட்கள் முதலீட்டு பொருட்கள் நீடித்த / நீடிக்காத பொருட்கள் 📍 Lesson 2 – இந்தியாவின் பொருளாதாரம் 1. இந்திய பொருளாதாரத்தின் மூன்று துறைகள் முதன்மைத் துறை (Primary Sector) விவசாயம், காடு, மீன் அதிகமான மக்கள் இதில் வேலை இரண்டாம் நிலைத் துறை (Secondary) தொழிற்துறை,...

*இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய அமர்வுகள்:*

  *இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய அமர்வுகள்:* *முதல் அமர்வு (1885)*   - இடம்: பம்பாய்   - தலைவர்: வியோமேஷ் சந்திர பானர்ஜி   - சிறப்பு: 72 பிரதிநிதிகள் பங்கேற்றனர், தாதாபாய் நௌரோஜியின் ஆலோசனையின் பேரில் காங்கிரசுக்கு பெயரிடப்பட்டது.   *1886 மாநாடு*   - இடம்: கல்கத்தா   - தலைவர்: தாதா பாய் நௌரோஜி    *1887 மாநாடு*   - இடம்: மெட்ராஸ்   - பேச்சாளர்: பத்ருதீன் தய்யாப் (முதல் முஸ்லிம் பேச்சாளர்)    *1888 மாநாடு* - இடம்: அலகாபாத்   - தலைவர்: ஜார்ஜ் யூல் (முதல் ஆங்கிலத் தலைவர்)    *1896 மாநாடு*   - இடம்: கல்கத்தா   - தலைவர்: ரஹீம்துல்லா சயானி   - சிறப்பு: முதல் முறையாக 'வந்தே மாதரம்' பாடுதல்    *1905 மாநாடு*   - இடம்: வாரணாசி   - தலைவர்: கோபால கிருஷ்ண கோகலே   - சிறப்பு: சுதேசி இயக்கத்தின் ஆதரவு    *1906 மாநாடு*   - இடம்: கல்கத்தா   - தலைவர்: தாதா ப...